உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நாச்சியப்பன் செய்த குறும்புச் செயல்கள் கணக்கெடுத்தால் பெய்த மழையிற் பெரிதாகும்; இவ்வாறு ஆறு கலகலக்க ஆயிழையார் நீராடிச் சேறு கலக்கிச் சிரித்திருக்கும் போதினிலே சுழிநீரில் அகப்பட்டுக் கொண்டாள் ஒரு தோகை ஐயோ எனுங்குரல்தான் அத்தனைபேர் வாய்களிலும் உய்யென் றெழுந்ததுகாண் உற்றங்கு நோக்குங்கால் ஒடுஞ் சுழிநீரின் ஊடே அகப்பட்டு வாடு முகத்தோடு மீளும் வகையின்றிப் பெண்ணுெருத்தி தத்தளித்துப் பேச்சுமூச் சொன்றின்றித் தண்ணி ருடன்போளுள், தையலர்கள் நெஞ்சொடிந்தே தோழி நிலைக்குத் துடிதுடித்துக் கூச்சவிட்டு வாழி யிறையே நீ காப்பாற்று வாயென்றே கூவித் தொழுதிருந்தார் கூந்தல் அவிழ்ந்தோட, ஆவி நிலைகுலைய, ஆடை குலைந்தாடப் பொங்கிப் புரண்டோடும் பொல்லா வினைகாரி கங்கை யுடனுருண்டு கண்விலகிப் போகின்ற காட்சியினைக் கண்டு கதிகலங்கி நின்றிருந்தார்; வாட்சிறுகண் ணுளுடலை வாரிக்கொண் டோடுகின்ற ஆற்றை அவர்கள் அவநம்பிக்கை யோடங்கே கூற்றின் உருவாகக் கொண்டு புலம்புகையில் ஒடுநீர்ப் பாங்கில் ஒருகாட்சி கண்டார்கள் தேடி யழைப்பாரின் தேவைக்குப் பாய்ந்துவரும் இன்னமுத னென்றே இறையைப் பெரியோர்கள் சொன்ன சொல் உண்மையெனத் தோகையர்க்குத் தோன்றிடவே