உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 41 உயிருக்குத் துணிந்து காத்தான் ஒருவன் கீழ்க்கரையில் யாரோ கிளர்ந்தோடும் ஆற்றினிலே வாழ்க்கை யருமை கருதாமல் பாய்ந்ததையும், சுற்றுஞ் சுழிப்பட்ட தோகை தனைத்தொடர்ந்து பற்றிக் கரைநோக்கிப் பாவை தனையிழுத்து நீரை எதிர்த்தங்கே நீந்தி வருவதையும் சேரக்கண் டார்கள்; சிரித்து மகிழ்ந்தார்கள்; ஈரத்தை மாற்றுதற்கும் எண்ணுதப் பூங்கொடிகள் ஒரக் கரைநெடுக ஒடி உவப்போடு தங்கள் அருந்தோழி தன்னைக் கரையேற்றும் அங்கத் துறைநோக்கி ஆவலுடன்சென்ருர். பொன்னின் தளிரைப் புதுமனிதன் தன்தோளில் சின்னமான் கன்றுபோல் சேர்த்தணேத்துத் தூக்கிவந்தான்; தோளில் அணைந்து துவண்டிருந்த பூங்கொடியைக் கீழே தரையில் கிடத்தினன்; அக்கணத்தே ஓடிவந்த தோழியரும் உற்றவ் விடஞ்சேர்ந்தார் கூடிவந்த அன்னவர்டால் கோதையினை ஒப்படைத்து நீருண்ட தாலே நிலவு மயக்கமிது; நேரஞ் சிறிதில் நினைவு திரும்பிவிடும்; உங்கள் கவலை ஒழிகவெனக் கூறிவிட்டுத் தங்க மனங்கொண்டான் தன்வழியே யேகிடவும் கோமதியைக் காப்பாற்றிக் கொண்டுவந்த அம்மனிதன் மாமனிதன் என்ருெருத்தி மற்றவனைத் தான்புகழ்ந்தாள். ஆமாம் புலையன் அவன்தொட்ட தாலிங்கே கோமதிதீட் டாகிவிட்டாள் என்ருெருத்தி கூறிநின்ருள்.