உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 43 ஆற்றுக்குத் தப்பிப் பிழைத்தெழுந்தாள் சாதியெனும் மாற்ருனுக் கஞ்சி மனங்கலங்கித் தத்தளித்தாள். சேரிப் புலையனெனைத் தீண்டிவிட்ட காரணத்தால் ஊரில் ஒதுக்கிவைப்பார் ஒட்டவிட மாட்டார்கள்; அன்னை துடித்தழுவாள்; ஆனல் விதியென்றே என்னை விரட்ட இசைந்திடுவாள்; தீப்புலேயன் தொட்ட இழுக்கென்று சொல்லியெனை ஆடவர்கள் கெட்ட அழுக்கென்று கீழ்ப்படுத்திப் பேசிடுவார்; ஒடும் புனலுக் குயிர்தப்பிப் பிழைத்திங்கே கூடும் பயனென்னைக் கொல்லும் வதையன்றி வேறில்லை யாதலினல் மீண்டும் புனற்கங்கை யாறே கதியென்றவள் முடிவு செய்துவிட்டாள். நன்றியொன்றும் சொல்லாத நங்கை தனை நினைத்துச் சென்ற மலையன் திரும்பி விழியோட்டக் கங்கையிலே வீழும் கருத்துடனே அவ்வழகு மங்கை திரும்பி நடந்துகரை நண்ணுவதைக் கண்டான்;புரிந்துகொண்டான்; காற்ருய்ப்பறந்துவந்தான்; வண்டு விழிமாதைப் பற்றி யிழுத்துவந்தான். சாவைத் தடுத்தான் புலேயன் கூற்றுக்குத் தத்தம் கொடுத்திடவா உன்னைநான் ஆற்றுக்குக் காத்திங்கு அழைத்துவந்தேன்? சாற்றக்கேள் ஊராருக் கஞ்சி உயிர்விட்டுச் சாவதினும் சேரிக்கு வாநீ சிறப்பாக வாழ்ந்திடலாம். நீசக் குலமென்று நிந்தித் தொதுக்காதே, மாசில்லை எங்கள் மனத்தில் அறிவாய்நீ