உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. நாச்சியப்பன் இந்திரனும் சந்திரனும் இட்டலிங்க மூர்த்திகளும் மந்திரமும் வந்தனையும் மாமறையும் சாத்திரமும் கண்டதில்லை யானுலும் நாங்கள் கடவுளருள் கொண்ட குழந்தைகளே, கூசாமல் வந்திடுவாய் என்று சொல்லிக் கையை இறுகப் பிடித்தபடி குன்றனைய தோளான் கொடியை யிழுத்துவந்தான். அத்தருணம் ஊரார் அனைவரும் சேர்ந்தங்கே கொத்த வரும்பருந்துக் கூட்டமென வந்தார்கள். புலையன்மேல் குற்ற விசாரணை யாரடா தீப்புலேயன்? ஆணவமா உன்றனுக்கே கூறடா நீஎம் குலக்கொடிகை பற்றுவதா? நில்லென் றுறுமினர் நீலகண்ட சாத்திரியார்; கொல்லென்று கொக்கரித்தார் கோதண்ட சாத்திரியார்; காட்டு விலங்கெல்லாம் அஞ்சிக் கலைந்தோடக் கூட்டு சபையொன்று கூப்பாடு போட்டார்கள். சிற்றுரர்ப் பெருந்தலைவர் சேஷகிரி சாத்திரியார் குற்ற விசாரணைக் கூட்டம் நடத்தினர். கோமதியாம் அந்தக் குளிர்நிலவை ஒர்புறமும் தாமதியா தாற்றில் குதித்துஅவளைக் காத்த புலைமகனை ஒர்புறமும் பொல்லாமேற் சாதித் தலைவர் விசாரிக்கச் சார்ந்தோர் இடையிடையே குத்தென்றும் வெட்டென்றும்கொல்லென்றும் கிள்ளென்றும் பத்து விதமாகப் பாய்ந்து குதித்தார்கள். கங்கைக் கிரையானுல் கைலாச வாசமுறத் தங்கைக்குப் புண்ணியமே சாரும்; புலேயனிவன்