உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 45 நீசத் தனமாக நீரில் குதித்தோடித் தோசத்தைச் செய்தான் துரோகிஎன் ருளுெருவன். மேற்குலத்தைச் சேர்ந்தவளின் மேனி தொடுவதுதான் காற்பிறப்பாம் சூத்திரனுக் காகாதென் றேயிருக்கக் கோமதியைத் தொட்டான் குறுமதியன் ஆதலினால் நாமிவனைத் தண்டித்தல் நன்ருமென் ருைெருவன். செப்புச் சிலைபோன்ற சின்ன மலர்க்கொடியாள் தப்பிவந் தாளென்று தாமகிழ்வார் அங்கில்லை தொட்டதால் தீட்டென்றும் தோசமென்றும் பாவமென்றும் குட்டை குழப்பிடுவார் கூச்சலே ஓங்கிற்ரும்! நால்வருண பேதமெனும் நாசமுறு குட்டையிலே காலுந் தலைமுடியும் கட்டோடே ஊறியதால் சாத்திரமே பார்க்கும் சழக்கர்கள்; பீடற்ற ஆத்திரமே கொண்ட அறிவற்ற மூர்க்கர்கள் ஆர்ப்பரித்தார்; சேஷகிரி சாத்திரியார் ஆம்பெரிய ஊர்த்தலைவர் வேத உரைவிளக்கும் மூடர்களின் கூட்டத் தலைவர்; குறையறிவே பற்றியவர் வாட்ட மடைந்தாரின் வாதை யகற்ருமல் காட்ட முடையாரின் கட்சி நிலைநாட்டும் கோட்ட நெறியன்றிக் கூறும் வழக்கைப் பகுத்தாயும் நீதி பதியாகார்; வையம் வகுத்தானின் உண்மை வழிக்குப் பழிசேர்த்தார். சீறும் குலத்தின் சிறுமைத் தலைவரங்கே ஏறிநின்ற பீடம் இறைநெறியைத் தூள்தூளாய்க் கொந்தும் பலிபீடம்; கூடும் அறத்தையெலாம் சிந்திக் கறைப்படுத்தும் சேதப் படுமேடை ! அன்பு நெறியென்றும் ஆன்ற வழியென்றும் முன்பு பெரியோர் மொழிந்த கருத்தெல்லாம்