உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாச்சியப்பன் மண்மூட வைத்து மதம்பிடித்த பேர்வழிகள் கண்மூடிச் செய்யும் கழிசெயல்கள் அத்தனையும் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்த காலம்அவர் சொல்வாக்கே வேதம்; பொய்ச் சூழ்ச்சிகளே நீதிநெறி இந்நிலையில் அந்த எளிய புலைமகனுக்கு எந்நீதி தந்திருப்பார் என்றுரைக்க வேண்டுவதோ! கையை வெட்டிக் காக்கைக்குப் போடத் தீர்ப்பு சேஷகிரி சாத்திரியார் செப்பிவிட்டால் அவ்வூரில், மேஷம் ரிஷபமென்ருல் மெய்யென்றே ஒப்பிடுவார் செல்வாக் குயர்ந்தவராம் சேஷகிரி சாத்திரியார் புல்வாய் அநீதி பொருந்த வழங்கலுற்ருர். சீராக வையமெனும் தேரோட வேண்டுமென்றே நாரா யணனிங்கு நால்வருணங் கள்படைத்தான் மூர்த்தி யவனின் முறைவழியை மாற்றுதற்கே ஊர்ச்சேரி வாழும் ஒருபுலையன் தான்.துணிந்தால் தேச மழியாதோ? தெய்வ மழியாதோ? நாச மடையோமோ நாமும் நமதினமும்? பேசா திருந்தால் பெரிய பிழையாகும் கூசாமல் தண்டம் கொடுக்க விலையென்ருல் நாளை மதிக்காது நம்மைப் புலேக்கூட்டம்! வேளை தவறின் வினையாகிப் போய்முடியும்! கோமதிக்குச் சாவுவரக் கூட்டும் விதியென்ருல் பாமரனும் இந்தப் பறையன் தடுப்பானே? எல்லாம் விதியென் றெழுதி யிருக்கையிலே பொல்லாப் புலேயனே போயதனே மாற்றிடுவான்?