உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 47 தொட்டணத்த கையிரண்டும் துண்டாக்கிக் கூறிட்டு வெட்டிஊர்க் காக்கை விருந்துண்ணப் போட்டிடுவீர்! தீப்புலேயன் தொட்டுவிட்ட தீட்டாலே வாட்டமுறும் காப்பிழந்த கோமதியைக் காட்டுப் புறநிறுத்தி வெட்ட வெளியில் வெயிலடிக்கும் வேளையிலே கொட்டிநறு நெய்யால் குளிப்பாட்டித் தீட்டகற்றி வீட்டுக் கழைத்திடலாம் வேத முறைப்படியே போட்டேன்என் ஆணையிது போவீர்என், ருேதியந்தச் சேஷகிரி சாத்திரியார் சென்ருர்; உடன்பெரிய கோஷமிட்டுக் கூட்டத்தார் சூழ்ந்து புலைமகனை வெட்டத் துடித்தவராய் வீறுமிகக் கொண்டவராய்க் கட்டின்றி யார்த்துக் கழுகுகளைப் போற்பாயச் சேரிப் புலையனவன் சிந்தித் தொருவழியைத் தேர்ந்து நடைமுறையில் செய்யத் தொடங்கிவிட்டான். புலேயன் எல்லோரையும் தீட்டாக்கிவிட்டான் சேஷகிரி சாத்திரியைத் தேடிப் பிடித்தவனும் பாசமுள்ள அண்ணனைப்போல் பாய்ந்து தழுவினன். கோதண்ட சாத்திரியைக் கூட்டத்தில் போய்ப்பிடித்து மாதைத் தழுவுதல்போல் மற்றங்குத் தொட்டணத்தான். நீலகண்ட சாத்திரியை நேரில் பிடித்தவனும் காலகண்டன் வந்தக்கால் கட்டிமார்க் கண்டேயன் ஒடிச் சிவலிங்கம் ஒன்றித் தழுவினுற்போல் கூடித் தழுவினன்; கூட்டத் தெதிர்ப்பட்டார் யாவரையும் மார்பில் அனைத்துத் தழுவியவன் சூவி யலைக்கழிந்த கோதையரை விட்டாலு: