உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாச்சியப்பன் ஓடோடிச் சென்றங்கே ஒவ்வொருத்தி தோளினையும் பாடிப் பிடித்தபடி பாய்ந்தோடிக் கொண்டிருந்தான். கூட்டத் திருந்த குழவிகுஞ் சத்தனையும் திட்டாகச் செய்து திரும்பி நகைத்தபடி சாத்திரங்கள் பேசிச் சதிசெய்தெம் கூட்டத்தைச் சூத்திரராய்த் தாழ்த்திவைத்த சூதெல்லாம் தூளாகிப் போகும் ஒருநாளில்! பொல்லாத தீக்கொடுமை வேகும்! எரிதழலில் வெந்தொழியும்! அந்நாள் வரும்விரைவில்! காத்திருப்போம்! வந்துவிட்டால் உங்கள் பெரும்வயிறு தொங்கிவிடும்! பேதை விழித்தெழுவான்! இன்றைக்கோ கூடியுள்ள எல்லோரும் தீட்டாகி மன்றத்தில் கீழ்ச்சாதி மக்கள் நிகரானர் ஆதலினல் உம்முடைய ஆணவத்தை விட்டொழிப்பீர் வேதம் விளக்குவது பேதமெனச் சொல்வோரே, சீத நிலவு தெளிக்கும் ஒளிவெள்ளம், மோதிவரும் தென்றல், முகிலின் துளிவெள்ளம் யாருக்குச் சொந்தம் அறிவீரோ? கங்கைநதி நீருக்கும் கோடை நிழலுக்கும் வையத்தில் ஈசன் எவர்சொந்தம் என்று வழங்கிவைத்தான்? மீசை முகத்தில் பிறந்துவிட்ட மேலோர்க்கும் காலின் அடியில் கருவான சாதிக்கும் பாலூட்டும் தாயாம் பரமனுக்கு யாவருமே மக்களென்ருல் பேதம் மதித்தல் பொருளாமோ? இக்கணமே நீவிர் திருந்திடுவீர்! இல்லையெனில் பிற்காலம் எல்லாம் பெருந்தீங்காய் வந்துமது நற்காலம் போக்கடிக்கும் என்று நவின்முனே!