பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 49. சேரிக்குத் தீ வைத்துவிட்டான் ஒரு தீயன் சேரிப் பறையா திரும்பிநீ பாரென்றே கூறினுன் வேதகிரிக் குள்ளன்; அவன் கையில் தியெரியும் பந்தம் திகழ்வதனைக் கண்டவனும் பாயும் விழியிரண்டும் பாய்ச்சினன்; தன்சேரி ஒலைக் குடிசையெலாம் ஓங்கு நெருப்பெரிய ஒலமிட்டு மக்களெலாம் ஓடிவரக் கண்டானே! ஆத்திரத்தால் நெஞ்சம் அதிர்ந்தான்; எழுந்தந்த மாத்திரத்தே பொல்லா மனிதர்களைக் கொன்று விடப் போராட எண்ணிப் புயந்துடிக்கச் சீறியவன் நீராடி வந்த நெடுஞ்சோதி ஒன்று கண்டான்! செஞ்சோதிப் பெம்மான் வந்தார் அன்பை வழங்குக! அன்பை வழங்குக! துன்பப் பகைக்கும்நீ அன்பே வழங்குக! நெஞ்சை யடக்குக! நெஞ்சை யடக்குக! பஞ்ச உணர்வும்நீ பைய அடக்குக! உள்ள விலங்குணர்வை ஒட்டி மனிதர்களின் உள்ளந் திருத்துகின்ற உச்சக் குரலெழுப்பிப் பார்வைக் கனிவோடும் பாச மொழியோடும் நேர்மைத் துணிவோடும் நெஞ்சப் பரிவோடும் கையில் திருவோடும் காவி யுடையோடும் மெய்யின் வடிவாக மேலைத் திசைநோக்கி ஐயன் வருகின்ருன் அன்பின் அடியார்கள் பையத் தொடர்கின்ருர் பத்தா யிரம்பேர்கள். 4 -