பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மேற்குலத்தார் அங்கே மிரண்டுபோய் நின்றிருக்க ஆர்ப்பரித்துப் போராடி ஆத்திரத்தைக் கொண்டிருந்த சாதிப் புலேயனவன் சாந்தி தரும்.ஒளியை சோதித் திருவிளக்கைத் தொல்லுலகைச் சீர்திருத்த எண்ணிப் பிறப்பெடுத்த இன்ப வடிவழகை மண்ணிலுள மக்களெலாம் மன்னுபே ரின்பத்தைச் சற்றுங் குறையாமல் சார்ந்துதத்தம் வாழ்க்கையிலே முற்றும் அனுபவிக்க மோனத் தவவாழ்வால் கண்டறிந்த பேரறிவை காந்தப் பிழம்பதனை வண்டுகவர் தேன்மலர்போல் வந்த எழில்முகத்தை புத்தரெனும் பொன்மேனிப் பூமானைத் தன்னடியார் அத்தனைபே ரோடும் அழகுப் படைபோலே கண்ட புலேயன் கனத்திருந்த தன்நெஞ்சில் கொண்டதொரு மென்மைக் குணத்தாலே ஆத்திரமாம் வஞ்ச நினைப்பகற்றி வையந் தளிர்க்கவந்த செஞ்சோதிப் பெம்மான் திருவடியில் போய்வீழ்ந்தான்! மெல்லக் குனிந்துதோள் தொட்டவனை மேல்துக்கி வெல்ல மொழியால் விரும்பி நலங்கூறிப் பொன்மேனி யோடு பொருந்த அணைத்தவனைத் தன்னே டிணேத்தார் தகை.