உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பம்பாய்ப் பஞ்சாங்கம் அறியாத துன்பம்; தெரியாத தீமை துரக்கம் வராமல் துவண்டு புரண்டங்கே ஏக்கம் பெருமூச்சாய் எண்ணம் கொதிகலய்ை வேக, வியர்வை வெளிவந்து பாய்நனைக்கச் சோகக்கண் ணிரருவி ஒடித் தலையணையை ஈரப் படுத்த, இதயக் கனத்தோடு வீரம் படுத்துவிட்ட வேந்தன்போல் சாய்ந்தங்கே கூவி யழுதற்குக் கூச்சமுற்றுப் பேச்சற்றுச் சாவை யணைதற்கும் சற்றேனும் தெம்பின்றிக் கேவித் துடிக்கும் புழுப்போலக் கிள்ளையெனும் பாவி மகளங்கே பாயில் கிடையிருந்தாள் பத்துநா ளாகப் படுந்துயரைத் தான்நிறுத்தால் மொத்தக் களிப்புங்கோல் முள்ளைப் புறந்தள்ளும்! வையப் பிறப்பெடுத்து வந்தநாள் தொட்டவளும் மெய்யாகத் துன்ப மிதிப்பட் டறியாளே. செல்லக் குழந்தை அவள் வெல்லக் கட்டிதான் மாடிவீ டேதுமில்லை; மந்தைப் பெருக்கமில்லை; நாடி யுழுதபயன் நல்கு நிலங்களில்லை;