உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 53 ஏக்கத்தில் விரிந்த எண்ணப்படம் ஏக்கப் பெருமூச்சோ எண்ணப் படம்விரிக்க நோக்கப் பழங்காட்சி தோன்றியதே ஒவ்வொன்ருய் சென்னைக் கடற்கரையில் சிற்றலையும் பேரலையும் ஒன்றன்பின் ஒன்ருக ஒடித் தொடர்ந்துவந்து மோதிக் கரைமணலே முத்திப் பணிந்தங்கே வேதன் அடியார்போல் வீழ்ந்து மறைந்தனவே! வந்த அலைமறைய வாரி நுரையெழுப்பிப் பிந்தி வருமலையும் பின்னும் மறைந்தொழியும்! ஒன்ருெழிய மற்ருென்ருே ஓங்கி யுயர்ந்துவரும் வென்றெழுமுன் ேைல விழுந்து கரைந்துவிடும், பாலாய் நுரையெழுப்பிப் பாய்ந்து பளபளப்பாய் மேலோங் கலைகண்டு மெய்மறந்து கிள்ளையவள் நின்றிருந்தாள்; அன்னுள் நினைப்பில் கழுத்தினிலே சின்ன மஞ்சள் தாலித் திருப்பூட்டி நின்றவனம் கண்ணன் அருமைக் கணவன் திருவுருவே வண்ணப் படம்போல வந்து தெரிந்ததுவாம். கல்லூரிக் கேகும் வழியில் கலகலவெனச் சொல்லாடிச் சொல்லாடிச் சொக்கவைத்த கண்ணனவன் மாலை வருமுன்னே வாயிற் படியருகே பாலைத் தெளித்ததுபோல் பண்பாய்ச் சிரித்தபடி காவலிட்டுக் காத்திருந்து காதல் மயக்குடனே வாவென் றழைத்து வழியெல்லாம் பேச்சாடிச் சோலைக் கொருநாளும்; தூக்கு சிலம்புடையாள் கோலச் சிலையிருந்து கூடுவார்க் கின்பளிக்கக் காற்றள்ளி வீசும் கடற்கரைக்கோர் நாளுமெனப் போற்றி யழைத்துப் புதிது புதிதாக ..