உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நாச்சியப்பன் விந்தைக் கருத்துகளும் வேடிக்கைப் பேச்சுகளும் சிந்தைக் கினியனவாய்த் தித்திக்கத் தித்திக்கக் கொண்டுட்டித் தன் உள்ளம் கொள்ளைகொண்ட கண்ணனவன் வண்டாய் மலர்க்குமலர் தாவாமல் தன்ைெருத்தி கூட்டே பெரிதாகக் கொண்டு மணங்கூடி நாட்டியதோர் இல்லறமும் நன்ருய் நடத்திவந்த எல்லாம் நினைத்தந்த ஏந்திழையாள் கிள்ளையெனும் நல்லாள் பெருமூச்சில் நாளும் நலிந்திருந்தாள். காரண்ங்காட்டாமல் கைவிட்டுப் போனுன் செத்தான் அவனல்லன் சேயிழையைத் தான்பிரிந்தான் பத்துநா ளாகப் பலபலவாய் நெஞ்சேங்கித் தூண்டிற் புழுப்போலத் துன்ப வளையத்தே ஆண்டு வதையுண் டகப்பட் டவளாக எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணித் தவிக்கின்ருள் கண்ணுக வாழ்ந்த கனவு மறைந்தாற்போல்! ஏதும் பிழைசெய் தறியாத ஏந்திழையாள் சூதாய்க் கணவன் தனைப்பிரிந்த துன்பத்தைத் தாங்க வியலாமல் தத்தளித்தாள்; தன்னலாம் தீங்கென்ன வென்றும் தெரிவிக்கா தேகிவிட்டான்; சென்ருன் ஒருமுடங்கல் தீட்டி யிருந்தாலும் குன்ருத உள்ளத்தைக் கொண்டிருக்கக் கூடுவதாம் ஒட்டும் உறவாக ஒன்ருக வாழ்ந்தவளைக் கெட்டுக் கிடவென்று கீழ்ப்படுத்திச் சென்றுவிட்டான் குற்றமென்ன செய்தேன் குறையென்ன வைத்தேனே பற்றற் றிருந்தேனே பாய்ந்தெதிர் பேசிச்