உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வீட்டுக் குடையவள்நீ உன்னை வெளியேற்றி ஒட்டுதற்கு யார்க்கும் உரிமையில்லை என்றுரைத்தாள். துணிந்தவர்க்குத் துன்பமில்லை கிள்ளை துணிந்தாள்; கிளம்பிவிட்டாள்; தன்வாழ்வைக் கிள்ளி எறிவாரின் கீழாம் செயல்மறுக்க, காதல் திருமணத்தைக் கைவிட்டுப் பஞ்சாங்க வேதத் திருமணமாய் வேருென்று செய்தற்குத் திட்டமிட்ட கண்ணன் செயல்தடுத்துத் தன்னுரிமைப் பட்டயத்தை நாட்டப் பயணம் புறப்பட்டாள். இந்த முறைதிரும்பி இங்குவர மாட்டேன்என் சொந்தம் நிலைநாட்டிச் சூது தவிர்த்திடுவேன் என்று திடங்கொண்டாள் ஏகித் திருவீட்டில சென்று புகுந்தாள்; திருவனையாள தன்னை விரட்டவந்த மாமி வியப்புத் திகைப்பாய் உருட்டுகின்ற வாயும் ஒடுங்கித் திடங்குலைந்து செய்வதறி யாதே திகைத்தாள்; திருமணமும் உய்வ தறியா தொளிந்து புறந்திரியப் பம்பாய்ப்பஞ் சாங்கம் பயந்தெளிந்த கிள்ளையர் முன் வம்பாய் முடியும் வகையுணர்ந்து கண்ணன் திரும்பிவந்தான் வீட்டுக்குச் செய்ய திருவாள் விரும்பிவைத் தாளே விருந்து.