உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி மின்னல் வள்ளி, உயிர்த் தோழி! வானங் கருத்து வரக்கண்ட ஏருழவன் தானேபோல் உள்ளத் தளர்ச்சி யகன்ருெழிய வள்ளி சிரித்து வரவேற்ருள் மங்கையெனும் புள்ளி மயிலனைய பொற்கொடியை; பக்கத்து வீட்டாள்; பொழுது விரையத் துணையாகும் கூட்டாக நாடோறும் கூடத்தில் வந்தமர்ந்து செய்தி பலபேசிச் செல்லும் திருவனையாள் உய்யும் வழிகாட்டும் ஓரினியாள்; இன்பங்கள் வந்தாலும் கூட மகிழ்ந்திடுவாள்; துன்பத்தில் நொந்தாலும் ஆற்றித் தணிக்க முயன்றிடுவாள்; தோழி யிலக்கணத்தின் தோற்றம்; அவளைப்போல் ஏழு கடல்சூழ்ந்த இப்புவியில் வேருெருத்தி வாய்ப்ப தரிதாகும்; வந்தாளைக் கூடத்தே ஓய்வா யிருக்க உரைத்துத்தன் வேலை முடித்துவந் துட்கார்ந்தாள்; வள்ளி முகத்தே துடிக்கும் உணர்ச்சிதனைத் தோழி யறிந்துகொண்டாள். மங்கையா என்ருய் மலர்ந்த முகங்கண்டேன் இங்கமர்ந்த பின்னே எழிலாம் முகங்கருத்தல்