உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நாச்சியப்பன் கண்டேனே வள்ளி கலங்கியதேன் சொல்லென்ருள் உண்டசோற் றுண்டையது தொண்டைக் குழியளவே தங்கிவிட்டால் உண்டாம் தடுமாற்றம் போல் நீள வங்கத்துக் கப்பல் வளிப்பட்ட வாறேபோல் உள்ளத் துதித்த உரைவந்து தொண்டையிலே உள்ளும் புறமும் ஒருவழியும் போகாமல் திக்கித் திணறச் சிறுவிழிநீர் கன்னத்தே தொக்கித் துளித்துளியாய்த் தோளை நனைத்துவிழ வள்ளி யழுதநிலை வந்திருந்த மங்கைக்கும் உள்ளத் துயராய் உறுத்தத் தொடங்கியதாம். பூவொன்றின் மேல்மற்ருேர் பூவந்து சாய்ந்ததுபோல் தாவி யருகமர்ந்து தங்கத் திருக்கையால் வாடி யழுகின்ற வள்ளி முகக்கண்ணிர் ஒடிப் பெருகாமல் ஒற்றித் துடைத்துவிட்டாள். வேதனையில் வெந்த நெஞ்சம் என்னென்று சொல்லேடி ஏனிப் படியழுதாய் மின்னு சுடர்க்கொடியே மேவு துயரென்ன? தோழிக் குரைக்காமல் துன்பத்தை நீமட்டும் கோழி கிளறுசிறு குப்பைமேட் டைப்போலே ஆக்காதே; யானை மிதித்த அப்பளம்போல் வாய்க்குஞ் சிறுநெஞ்சை வாடி நொறுங்க இடங்கொடா தேஎன்றன் இன்னுயிரே ஆவல் அடங்குமுன் சொல்லேடி யாது நடந்ததென்ருள். விம்மித் தணிந்தநெஞ் சத்தாள்தன் வேதனை கம்மத் திருவகப் கழல:மொழிகூட்டி