உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 61. மங்கைக் குரைத்தாள் மணவாளன் செய்துவரும் வெங்கொடுமை வாழ்வை விழலாக்கும் தீக்கொடுமை தாங்கா தெரிகின்ற தன்னெஞ்சக் கொப்பரையை தீங்கான தீக்குழியைத் தீரத் திறந்துவிட்டாள். அன்பர்பணி செய்யஎன ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலைதானே வந்தெய்தும் என்றுசொல்லி யாரோ எழுதிவைத்த அக்கவிதை என்மட்டில் நீரில் எழுத்தாக நீர்த்துப்போய் விட்டதடி! வந்தநாள் தொட்டு வறுமைக் காற்ருமல் நொந்தநாள் தானிங்கே நூறுமேல் நூருகும் தொட்டுத் திருத்தாலி சூட்டி யனேந்தநாள் தொட்டு நடந்துவரும் கூத்தைப் பிறர்க்குரைக்க நாவும் எழவில்லை; நஞ்சத்தைத் தொண்டையிலே தேவன் அடக்கியது போலடக்கும் தெம்புமிலை; கொண்டநாள் பெற்ருேர் கொடுத்தசீர் அத்தனையும் வண்டியின் மேலடுக்கி வந்தது.நீ கண்டிருப்பாய்; அத்தனையும் வட்டிக் கடகாகிப் போச்சுதடி மொத்தப் பணமாக மூவா யிரத்தை வரதட் சணையாய் வழங்கியதோ இன்று பரதேசத் தானின் பரிசாகப் போச்சுதடி! வரும்படி யற்றவனின் பெரும்படிச் செலவுகள் கட்டி யழைத்துவந்த காலமுதல் இன்றுவரை வெட்டிப் பொழுதாக வீணுக்கிக் கொண்டுள்ளார் வேலை கிடைக்கவில்லை வேறென்ன செய்வேனென் ருேலமிட் டென்னே உருக்குலையத் தானடிப்பார்.