பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நாச்சியப்பன் கையிருப்பை யெல்லாம் கழற்றிக் கொடுசென்றே ஒய்யின் பிராந்தியென ஒயாக் குடியாகி, வீட்டுக்கு வந்து விரட்டி யடித்திடுவார்; சீட்டு, குதிரைச் செலவுகளும் சேர்ந்துவிட்டால் எங்கள் குடும்பந்தான் எத்தனைநாள் தாங்குமடி தங்கப் பவுனை சங்கிலியும் பூச்சாச்சு; வைர மிழைத்துவைத்த மோதிரமும் கல்லாச்சு; கைவளையல் அத்தனையும் கண்ணுடி யாச்சு; கடன்காரன் வீட்டுக்குக் கட்டிலொடு மெத்தை உடன்போகப் பாய்தான் உறங்கும் விரிப்பாச்சு முந்நூறு ரூபாய் முழுதாகச் சம்பளமாம் ஐநூறு ரூபாய் அதன்மேல் வரும்படியாம் என்று தரகர் இயம்பியபொய் கேட்டப்பா நின்று மயங்கினர்; நேரில் உயர்தோளும் கண்ணழகும் மார்பழகும் கண்டு மயங்கிநான் எண்ணம் இசைந்தேன்; எழில்வாழ்வுக் கற்பனைகள் ஆயிரமாய்க் கட்டி அழகழகாய்ச் சோடித்து பாயிரமும் நூலுமாய்ப் பாடிக் களித்திருந்தேன்; பார்த்திபனைப் போலிவரும் பாராளா விட்டாலும் நேர்த்தியற்ற பெண்தொடர்பில் நிச்சயமாய் அர்ச்சுனர்தான் நீதித் தருமனுக்கு நேரில்லை யென்ருலும் சூதில் அவனேதான்; தோற்பதிலும் அப்படியே! போக்கிரிகள் கூட்டால் பொறுப்பற் றிருந்தாராம்; காற்கட்டை போட்டுவிட்டால் கண்ணியரா வாரென்றே எண்ணித் திருமணத்திற் கேற்பாடு செய்தனராம்; கண்ணுங் கருத்தாய்க் கவனிக்க வில்லையென்று