உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 65 அஞ்சிப் பதிலுரைக்கும் அஞ்சுகத்தின் பேச்சில்லை கெஞ்சிப் பலனின்றிக் கேட்ட பொருள்கொடுக்கும் மாதங்கில் லாமை மடையன் அறியவில்லை போதைத் துடிப்போடு பொங்குஞ் சினத்தோடு கூவி யழைத்தேன் குரல்கேட்க வில்லையோ வாவிப் படியென்று வன்கை மடித்தபடி குத்தொன்று விட்டான் குமுறித் தரைமீது மொத்தி வலியெடுக்க முட்டாள் சினத்தோடு தள்ளிப் படுத்தால் நீ தப்பி விடுவாயோ கள்ளி எனக்கூறிக் கைவலிக்க மீண்டொருகால் ஓங்கிக் கொடுத்தான் ஒருகுத்துப் போதையெலாம் நீங்கிற்றுக் கண்ணின் நிறைவான பார்வையிலே ஆங்கொருத்தி யின்மை அறிந்தவனும் பொங்குசினம் தேங்க அறைமுற்றும் தேடி விழிசெலுத்தி உள்ளதெலாம் ஈந்தே உதைவாங்கும் பத்தினியாள் வள்ளியினைக் காணுமல் வாடி மனஞ்சோர்ந்தான். ஆத்திரத்தோடு அலைந்தான் குடிவெறியன்! எங்குபோ னளென்றே எண்ணத்தில் தோன்றவில்லை இங்கு வரட்டும்நான் என்னசெய் வேனென்றே எண்ணிப் படுத்தான்; இரவு நடந்ததுவாம் கண்ணில் உறக்கம் கவியத் தனமறந்தான். காலை மலர்ந்துந்தன் கண்விழியா தன்னவனும் மாலைமணி மூன்றுக்குத் தானெழுந்தான் கைகால் முகங்கழுவி வந்தங்கே முற்றத்தில் நின்ருன்; பகபகெனத் தன்வயிற்றில் பாழும் பசிதோன்ற 5