உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நாச்சியப்பன் வள்ளி எனவழைத்தான் வந்தங்கு நிற்பதற்கோ உள்ளந் துடிக்க உதைவாங் குதற்கோ அவளில்லா மையுணர்ந்தான்; அந்தப் பசியோ அவளில்லை யென்ருல் அடங்கிக் கிடந்திடுமா! வெம்மைச் சினம்பொங்க வீட்டின் வெளிப்போந்தான் அம்மயத் தங்கே அவள்வந்து நின்றிருந்தால் செம்மைக் கடித்துடலில் செங்குருதி பீறிவரக் கும்மிப் புடைத்துக் கொலைசெய்தும் விட்டிருப்பான். ஆத்திரந்தான் அத்தனையாம் ஆற்றுநீர்ப் பாய்ச்சலது பேர்த்துவரும் காட்டுமரம் போலங்கே பேயுணர்வு பொங்கித் ததும்பிவரப் போக்கை யுணராளுய் எங்கெங்கோ சுற்றிவந்தான்; யாராரோ கண்டுவந்தான் நாளும் பொழுதும் கடன்வாங்கித் தான் கழித்து மீளும் நினைப்பின்றி மேன்மேலும் தீவழியில் வீழ்ந்தழிந்து கொண்டிருந்தான்; வீடு தன மறந்தான் ஆழ்ந்த மனப்பற்றும் அச்சமும்கொண் டாடிவந்த வள்ளி விலகியதும் தான்மறந்தான்; வாழ்வுத்தேர் துள்ளிப் பறந்திருண்டு தூக்க உலகத்தை நாடி விரைகின்ற நாட்டத்தை எண்ணுமல் கூடிப் பழிச்செயல்கள் கொண்டாடும் நண்பருடன் வேடிக்கை யாய்ப்பொழுது விளுப்க் கழிப்பதுவே வாடிக்கை யாய்க்கொண்டு வாழ்வு நடத்திவந்தான். ஏமாந்தார் சொத்தை ஏப்பமிடும் கூட்டத்தான்! ஏனேடிப் போளுளோ எங்கோடிப் போளுளோ தானகப் போளுளோ தாயாரைச் சேர்ந்தாளோ