உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. நாச்சியப்பன் செய்துகொள்ளும் வேலையிலே தேர்ந்துவிட்டான்; - - சேர்த்தபொருள் அவ்வந் நொடியே அழித்து, நெறிநின்ருர் ஒவ்வாச் செயல்புரிந்தும் ஒடி ஒளிந்திருந்தும் வாழ்க்கை நடத்தி வருங்கும்ப லோடிருந்தான். திருடி வந்த அழகுமயில் வேர்க்க விறுவிறுக்க வேறுவே ரூர்களுக்கே ஒடுவதும் தேடுவார்க் கஞ்சி யொதுங்குவதும் கூடுவதும் நாள்பார்த்துக் கொள்ளை யடிப்பதுமாய்ப் பேயாய் அலைந்து பிறரைத் துயர்படுத்தி நாயாக வாழ்க்கை நடத்திவந்த நாயகனும் ஓரிரவில் தோழர் உதவ ஒருவீட்டில் ஏறிக் குதித்திறங்கி ஏதேதோ கொள்ளையிட்டான் ஊரின் புறத்தே ஒருகாட்டில் நண்பரெலாம் சேரத் திருடிவந்த செல்வத்தைப் பங்கிடுங்கால் அங்கொருவன் வந்தே அழகு மயிலொன்றை இங்குநான் கொள்ளையிட்டு வந்தேன் எவரதனைச் சேர்வதென்று தீர்மானம் செய்திடுவீர் என்றுரைத்தான். நானென்றும் நீயென்றும் நண்பர்க்குள் ஓர்சண்டை தானெழுந்த தங்கே தடியன் அவனுரைப்பான் கொண்டுவந்த பெண்மயிலோ கொள்ளையழ குள்ளவளாம் கண்டுவந்த நானே களித்திருக்க எண்ணிடினும் பங்கிட்டுக் கொள்ளும் பழக்கத்தை மீருமல் இங்கிட்டுக் கொண்டுவந்தேன் ஏற்ற முடிவெடுப்பீர்