உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 69 கொள்ளைப் பொருளில் அவள் ஒருபங்கு ஏழுபேர் நம்மில் எவருரிமை கொண்டாலும் ஏழில் ஒருபங் கிழந்துவிட வேண்டிவரும் பொன்னுரிமை கொண்டார்க்குப் பூவை யுரிமையில்லே மின்னுமவள் வேண்டிற்பொன் மேலாசை விட்டிடுவீர் அன்னன் விதிகேட் டயர்ந்தவப் புல்லரெலாம் தின்னுங் கனியொத்த சேயிழையை எம்முன்னே கொண்டு நிறுத்திடுவாய் கூர்ந்தவளைக் கண்ணுலே கண்டு முடிவுரைப்போம் காட்டென்று கூறினரே! மூடித் திரையிட்டு மொய்குழலைக் கொண்டுவந்தான் ஒடித் திரைவிலக்கி ெைனாருவன் அப்பொழுதே மின்னல் ஒளிர்ந்ததோ மேல்வான் இடியிடித்துப் பின்னும் முழங்கிற்ருே என்னப் பெரிதாக வள்ளி மணவாளன் வாய்கிழியக் கூச்சவிட்டுத் துள்ளிக் குதித்தான் தொடாதே ஒருபயலும் தொட்டால் பிணமாவாய் தூரப்போ வென்றுரைத்துக் கட்டாரி தூக்கிநின்ருன் கள்வர் அயர்ந்துவிட்டார்! தேனெத்த சேயிழையைத் தீண்டப் படாதென்றே ஏனிந்தப் பாவி தடுத்தான் எனவியந்து கூட்டாளி யானேர் குமுறிநின்ற போதினிலே வாட்ட மடைந்தங்கு வந்துநின்ற வள்ளியவள் அத்தானென் ருேடி அவன்மார்பிற் சாய்ந்துகொண்டாள் சித்தந் தெளிந்தச் சிறுதொழிலோர் நீங்கிவிட்டார் பொன்னே தவறுவழி போனேனை யுந்நிலைமை இன்னே திருந்திவிட்ட தேடி யெழுந்திருப்பாய் புத்தம் புதுவாழ்வு போற்றிடுவோம் என்றுரைத்தான் கைத்தலத்தைப் பற்றிக் கனிந்து! .