உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கங் கடந்த மங்கை உன்னைப் பிரிய உள்ளங் கலங்குதே! போகத்தான் வேண்டுமா? பொல்லாக் கடற்பயணம் ஏகத்தான் வேண்டுமா? என்னுயிரே என்னைவிட்டுப் போகத்தான் வேண்டுமா? புத்தம் புதுவாழ்வில் ஆகத்தாற் கூடி அணேந்து கலந்தஉயிர் வேறுவே. ருகிநெஞ்ச வேதனையைத் தாங்காமல் கூறுகூ ருயிருக்கக் கூடுவதோ சொல்லுங்கள்! ஆளுயரம் தாவி அகப்பட்ட கப்பல்தனே மீள இறக்கி மிகச்சாய்த்து மேலெழும்பத் தூக்கி அலையொன்று துள்ளுகின்ற வேளையிலே தாக்கி அலையொன்று தண்ணிரை உள்ளடிக்கும்! ஒன்றன்பின் ஒன்ருய் உருண்டு மரக்கலத்தை நின்று நிலைக்காமல் நீரில் சதிராட்டிச் சாய்த்தும் நிமிர்த்துமிகச் சஞ்சலத்தை உண்டாக்கிப் பேய்த்தனமாய் நீரலைகள் பீறி உயர்ந்தெழுந்து கூத்தாட்டம் ஆடுங் கொடுங்கடலில் அக்கரைக்குப் போய்த்தான் உருளும் பொருள் சேர்க்க வேண்டுமா? எக்காலம் போய்ச்சேர்வோம் என்று கரைகாண்போம் சொக்கேசா நீதான் துணையிருக்க வேண்டுமெனச்