உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நாச்சியப்பன் அன்று காதல்; இன்று பிரிவு! தோழியர்கள் ஓடிவந்து தோகையினைச் சூழ்ந்துகொண்டார் வாழியரோ வாழியெனத் தண்ணிர் வரவழைத்துக் கோதை முகத்தடித்தார், கொஞ்சுங் குரல்குழைத்து வேதனையைப் போக்க விளம்பிநின்ருர் நன்மொழிகள் சார்ந்த மயக்கத்தைத் தண்ணிர் விலக்கிடலாம் சோர்ந்திருக்கும் உள்ளத்தைத் தூக்கி நிறுத்திடுமோ? ஆதரவாய்ப் பேசுமவர் அன்பு மொழியெல்லாம் காதலனின் அன்புமொழி காட்டுநலம் கூட்டிடுமோ? ஆறுதிங்கள் தானிருக்கும் அன்புடை யான் கைப்பிடித்துத் தேறுதலைக் கேட்டவளோ தேம்பி அழுதிருந்தாள்! ஒத்துப் பழகி உயிர்கலந்து முத்தமிட்டுத் தித்திக்குஞ் செய்தி சிரித்திருக்கப் பேசிநின்று இவ்வுலக இன்பம் இதுவென்று காட்டுதற்குச் செவ்வை மொழிபேசிச் சிந்தனையில் வந்தமர்ந்து பூவாங்கி வந்து புறத்தே நகைத்துநின்று நாவல் நிறக்குழவில் நான்தான் செருகிடுவேன் என்னைத் தடுக்காதே என்றுதன் கைமறித்து மின்னலைப்போல் வந்து மிகநெருங்கித் தன்னேடு சேர்த்தனைத்துக் கொண்டான்; சிறிதும் தயங்காமல் போர்ப்புலியைப் போலப் புதுநாட்டுக் கேகிவிட்டான் முத்துப்பல் வ்ாய்திறந்து மூட ஒளிமறையும் அத்தைப் பொறுப்பேனே யானென்று கூறியவள் மூக்குக்கு முத்தாலே மூக்குத்தி செய்திட்டான் யார்க்குன் அழகுவரும் அன்பே எனமொழிந்தான். ஏழுவை ரத்தால் எழில்குறைந்த தென்றுசொல்லி பேழைதிறந் தொன்பதுகல் தோடு பெறவைத்தான்