உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 75 ஒன்பான் வகைக்கல்லும் ஓரிடத்தில் பார்ப்பதற்கே உன்பால் சிறுகழுத்தே ஒக்குமெனக் கண்டசரம் பண்ணிவந்தான்,நெற்றிக்குப் பச்சையிலே சிட்டிவைத்தான் கண்ணேத் தவிர்த்திங்கே கால்முதலாய் உச்சிவரை மெட்டி சிலம்பென்றும் மேகலைமுத் தாரமென்றும் கட்டு மணிமாலை கைவளைவி காப்பென்றும் அத்தனையும் பூட்டி அழகுபார்த் தென்னுயிரே எத்தனைதான் போட்டாலும் எல்லா நகையுமிங்கே உன்றன் மதிமுகத்துக் கொப்பாக வில்லையடி என்றன் சுவைக்கரும்பே என்றுடில பாராட்டி நாளும் விளையாடி நாமிருப்போம் என்றுரைத்தான் ஆழுங் கடல்மேலே ஆடப்போய் விட்டானே. நானுனக்கு நீயெனக்கு நாளும் இணைபிரியோம் வானிருக்கு மாமதிக்கு வாழுமிடம் வேறுண்டோ கூறேடி என்ருன் கொடும்பிரிவில் மூன்ருண்டு தீரேடி என்று திரைகடலி லோடுகின்ருன் என்று பலவெண்ணி ஏங்கிப் பொழுதெல்லாம் நின்றுநின்று குன்ருக நிற்பதுபோல் தோற்றமிட மேனி பசந்தழகு மேலுடலின் தோல்கரைந்து தீனி யிழந்த சிறுபசுவைப் போல்மெலிந்து பச்சை நரம்போடு பார்க்கத் தெரிகின்ற குச்சி எலும்பு குறித்தெண்ணத் தக்கதுவாய்த் தோற்றமுறக் காலத்தால் தோற்கடிக்கப் பட்டாள்போல் காற்றுக் கசைகின்ற நாணலைப்போல் காட்சிதந்தாள்.