பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நாச்சியப்பன் அணு அணுவாய்க் காலம் அசைகின்றதே! நேரில் உரையாடி நிற்பதுபோல் தாளெழுதி வாரத்திற் கொன்று வழக்கம்போல் போக்கிடுவான் தன்னலத்தைச் சொல்வித் தளிர்க்கொடியின் இன்பநலம் என்னென்று கேட்டே எழுதி யிருப்பதற்கு நானும் நலமென்றே நங்கை எழுதிடினும் கானல் வெளிநீரே கண்ட நலமெல்லாம்! உண்ணப் பிடிக்கா துறங்கப் பிடிக்காமல் எண்ணக் கடலில் இயங்கு மரக்கலமாய் நாளெண்ணி வாரம் நடக்கவைத்துத் திங்கள்தொறும் கூளைக் கருப்பனர் கோயிலிலே பொங்கல்வைத்து மூன்ருச்சு பொங்கலினி முப்பத்து மூன்ருளுல் தோன்றுவான் என்னத்தான் தோளை யடைவனென்று கற்பனையில் மூழ்கிக் கடவுளரை வேண்டிநின்று அற்ப மகிழ்ச்சிகளில் ஆழ்ந்து கனவுகண்டு நெஞ்சு பொறுத்து நினைவுலகில் தன்வாழ்வை கொஞ்சஞ் சிறிதென்று கூடும் பொறுமையினால் தள்ளி வரும்பழக்கத்துக் காளாகி நாடோறும் வெள்ளிக் கதிரோன் விரைந்து கடன்புரிதல் போலே பொறியாகிப் பொய்வாழ்க்கை வாழ்வாளின் மேலே கருணையின்றி மெல்லப் பொழுதழியும்! ஊர்ந்துார்ந் தோராண் டொழிய ஒருநாளில் சீராளர்; மாமனர் தெண்ணிர்க் கடல்கடந்து அன்பு மகனுக்கங் காதரவாய்ச் சார்ந்திருக்க உன்னிப் புறப்பட்டார் ஊரெல்லாம் வாழ்த்துரைக்க, எண்ணி இரண்டாண்டில் இங்கு வருவாரென் கண்ணுக் கினிய கணவரெனக் காத்திருந்தாள்!