உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 83 மீறித் தமிழ்நாட்டு மின்கொடியார் செல்வதில்லை ஊறிநறுந் தேன்குடத்தில் உள்ளிருக்கும் இஞ்சியென வாழ்ந்த திருவாழ்வை மாற்றி யொருவாழ்வு தேர்ந்துகொள்ளும் பான்மை சிறிதும் எமக்கில்லை. கொண்டவரைப் போற்றும் குலம் ஆசைக்கு வாசமலர் அன்றன்று சூடிடலாம் பூசைக் குரியதிருத் தெய்வம் புதுக்குவதா? என்ருள் அழகம்மை ஏந்திழையாள் கேட்கின்ருள் உன்றன் நடவடிக்கை ஒன்றிவர வில்லையென்றே கைவிட்டுச் சென்றவரைக் கட்டுப் படுத்திடநீ வெய்தாய் முயல்கின்ருய்; வேண்டார் உடன்வாழ எண்ணுமுன் போக்கே எனக்கு வியப்பாகும் மண்ணில் உயிர்க்குயிராய் வாழ்தல் இயலாதேல் கூடி யிருப்பதினும் கொள்கைக் குரியவரைத் தேடிநலந் துய்த்தல் சிறப்பாகும்; இன்றென்னை நாடி யணைந்தவரை நானும் விரும்புகின்றேன் பாடி மகிழ்கின்ருேம்! பண்பு சரியின்றேல் நெஞ்சு கருதுகின்ற நேரிழையாள் வேருெருத்தி துஞ்சப் பிரிந்திடுவார் தூய கருத்துடனே என்னை விரும்புகின்ற இன்னெருவ ரைத்தேடிப் பின்னு மணவாழ்வு பெற்றிருப்பேன் இவ்வுலகில் வாழும் வழியிதுவே, பண்டை வழக்கென்றும் சூழும் பழியென்றும் சொல்லு மொழியெல்லாம் வாழ்வை வீழலாக்கும் வார்த்தைகளே நீயறிக தோழியே செல்க! துணைவர் வரும்நேரம்