உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாச்சியப்பன் பாண்டிமங்கை அந்தப் பதில்கேட்டுத் தானகைத்தே ஈண்டுள்ள என்கணவர் தம்மை எனக்களித்தால் போதுமென்று சொன்னுள்; புதுமங்கை சொல்லுபொருள் ஏதென் றறியா திருந்தாள்; உயிரான என்கணவ ரன்றி எவருமிங் கில்லையம்மா நின்கணவர் யாரோ நிகழ்த்துகென்று கேட்டாள். அழகம்மை அப்போதே அந்தப் புதியாள் எழிலுள்ளந் தன்னை எளிதாய்ப் புரிந்துகொண்டாள். தன்கதையை முற்றுந் தடதடவென் ருெப்பித்தாள் என்வாழ்வை உன்கையில் இன்று நான் ஒப்படைத்தேன் உன்கருத்தைச் சொல்வாய் ஒரு நொடியும் என்னலே துன்ப முனக்கில்லை தோழி என்றழைத்தாள். இரண்டுமன மொன்றி இருக்கின்ற வாழ்வைத் திரண்டுர் எதிர்த்தாலும் சின்னமுற மாட்டாதாம். ஒன்றி யிருந்தவர்கள் ஒத்திருக்க மாட்டாமல் சென்றுவிட்டால் வேருேர் திருத்தோளை நாடித்தம் வாழ்விற் புதிய வளஞ்சேர்த்துக் கொண்டிடலாம் தோழமைக்கு வேருேர் துணைதேடிக் கொள்ளென்று பாடம் உரைத்தாள்அப் பண்பில் வளர்ந்தஅவள் மாடப் புருவனைய மங்கை அழகம்மை எங்கள் தமிழ்நாட்டில் இவ்வழக்கம் இல்லையம்மா தங்கத் திருத்தாலி தன்னை யளித்தார்க்கே என்றும்உரி யாராய் இருந்து நலங்காத்து நின்று புகழ்நிறுத்தி நேயத் துடனிருந்து வாழ்ந்திடலே எங்கள் வழக்கம்; பிரிந்துவிட்டால் மாய்ந்தாலும் மாய்வோமே அல்லாமல் மற்ருெருவர் தோளின் துணை நாடித் தோகையர்கள் வாழ்வதில்லை நீளவரு மிந்த நிலையான பண்பாட்டை