உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 85 என்ன அதிர்ச்சி! எதிர்பாராப் பேரதிர்ச்சி! மின்னல் வழிதவறி மேல்வானம் விட்டிறங்கித் தன்வீட்டுக் கூடத்தைத் தஞ்ச மடைந்ததோ! பின்னும் அதுதன்னைப் பேதலிக்கச் செய்ததோ! முன்னுந் தெரியாமல் மூண்டிருக்கும் சூழ்நிலையாம் இந்நிலையில் என்செய்வ தென்றறியா தானகிச் சிந்தை குழம்பித் திகை க்திருக்கும் போதினிலே அந்தப் புதுமனைவி ஆவேசங் கொண்டவள்போல் ஊரில் ஒருமனேவி உள்ளாள் எனுஞ்செய்தி நீரேன் மறைத்தீர்? நிகழ்த்திடுவீர் இப்போதே! எம்மில் உமக்கினிமேல் யார்வேண்டும் என்றுரைப்பீர் இம்மங்கை யும்மை எதிர்பார்த்துக் காத்திருந்தும் புன்செயலைக் கேள்வியுற்றுப் போராட் வந்துவிட்டாள் முன்னுரிமை கொண்ட முறைப்படியே அன்னவளைச் சேர்ந்துவிட்டால் இந்தச் சிறியாள் கதியென்ன தேர்ந்து முடிவெடுப்பீர் தேவை எவளென்பீர் இந்நேரத் தொல்லை இதுஒழிந்தாற் போதுமென்றே ஒன்ரு யிருப்பீரென் ருேத நினையாதீர்! உண்மையுள்ள காதலிலே உள்ளங்கள் ஒன்றிலொன்று வண்ணமுற ஒட்டுவதே வாழ்விற் சிறப்பாகும் ஒன்றுக் கிரண்டென்ருல் ஒட்டுறவு விட்டொழிய நின்று நிலைப்பதெலாம் நேரில் பிணக்குகளே! எம்மில் ஒருவரை நீர் ஏற்றிடுக; மற்ருெருவர் கும்முங் கடலுக்கோ கூவும் நெருப்புக்கோ தொங்குங் கயிற்றுக்கோ தொட்டணைக்கும் மின்னுக்கோ பங்காளி யாகின்ருேம் பார்த்து முடிவுரைப்பீர்!