உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நாச்சியப்பன் பொய்யருடன் வாழ்வதா? பட்டுப் படபடெனப் பட்டாசு விட்டதுபோல் கொட்டி யஸந்தாளக் கோதைக்கு மாற்றுரைக்கத் தோன்ருமல் அங்கே துணுக்குற்று நின்றிருந்தான் ஊன்ருத கோலைப் பிடித்த கிழவன்போல் தாய்க்குத் தெரியாமல் தாளுய் அடுக்களையில் போய்க்கையைச் சுட்டுப் பொசுக்கிக்கொண் டான்போலப் பேந்த விழிவிழித்துப் பேசும் வலிவின்றி சேர்ந்த மனைவியர்க்குத் தீர்ப்புரைக்கும் தெம்பின்றி உட்கார்ந் திருந்தானின் உள்ளத் துடிப்புணர்ந்து பட்டு மனம்படைத்த பாவை அழகம்மை அந்தப் புதுப்பெண்பால் 'அக்கா, இருவருமே இந்த மனைவிளங்க ஒன்ருய் இருந்திடுவோம்” என்ருள்; அதுகேட்ட ஏந்திழையாள் சொல்கின்ருள் நன்றென்று நீநினைத்தால் நானுெப்ப வேண்டாமா? ஒன்றி மனங்கலந்த உள்ளத்தில் மற்ருெருத்தி சென்று புகுந்தாலும் தீதாகும் வாழ்க்கையிலே எவ்வா றிருவர் இணைந்திருக்கக் கூடுவதாம்? ஒவ்வாப் பழக்கத்தை ஒதாதே விட்டுவிடு! முன்னைத் தொடர்பை முழுதும் உணர்த்தாமல் என்னைத்தன் காதலியாய் ஏற்றுவிட்ட பொய்யருடன் வாழ மனமில்லை; வையத்து மீண்டுமொரு தோழமையும் நாடத் துணியேன்; எனக்குரிமை உண்டெனி னும்வேண்டேன்; உலகுக்குத் தொண்டுசெயக் கண்டேன் ஒருவழியைக் கண்டுகொண்டேன் நானென்று புத்தமடம் ஒன்றுக்குப் போய்ச்சேர்ந்தாள் பிக்குணியாய் அத்தனையும் பார்த்தே அசையாமல் வீற்றிருந்த