உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தாச்சியப்பன் சங்கம் முழக்கினுேம்: தங்கமே கலங்காதே! இன்று தொழிற்சாலை வேலை நிறுத்தமடி ஒன்றுங் கலங்காதே, உட்கார் எனப்பணித்தான். என்னவோ ஏதோ இடர்ப்பா டெனக்கலங்கிப் பின்னிச்சிக் குண்டிருந்த பேதை மனந்திருந்தி வேலை நிறுத்தமா என்ன விவரமென்று கோலமுறு நெஞ்சு குறுகுறுக்கக் கேள்வியிட்டாள். சம்பளத்தைக் கூட்டென்று தான்கேட்டோம்; நாள்நாளும் வம்பை வளர்க்கும் பொறுப்புடையார் தாமறுத்தார்; எங்கள்கோ ரிக்கைதனை ஏற்குமட்டும் போரென்றே சங்கம் முழக்கிவிட்டுத் தான்வந்தோம் என்றுரைத்தான். எத்தனைநாள் போராட்டம் என்று மனைவிளக்காள் அத்தாளும் பொன்னப்பன் ஆண்மைத் திருமுகத்தைப் பார்த்து வினவினுள்; பச்சைக் குழந்தை நீ போர்க்கொடியைத் துக்கிவிட்டோம்; அந்தப் பொறுப்புடையார் கோரிக்கை தன்னைக் குறையாமல் ஏற்குமட்டும் போருக்கு நிற்போம்; பொறுத்திருந்து பாரென்ருன். சம்பளநாள் சென்று சமர்தொடுத்தால் தீதின்றே; வம்பும் நடைபெறலாம்; வாழ்வும் நடக்குமென உள்ளத்தின் எண்ணம் உரைக்காமல் ஆளனேயே கள்ளமற்ருள் நோக்கிக் கணநேரம் நின்றிருந்தாள்! பார்த்தபடி நின்ருல் பசிதீரு மாவென்றே ஆர்த்திருக்கும் நெஞ்சத்தின் ஆணைக்குக் கட்டுண்டே ஒடினுள் ஒடி உணவுகொண்டு வந்தெதிரே வாடிக்கை போலே வாழை யிலைவிரித்தாள்.