உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 இன்பத் திருநாளில் ஒரு கவலைத் தோற்றம் இந்நாளில் அன்புடையாள் இன்பவல்லி தன்கொழுநன் பொன்னை நெஞ்சுடையான் பொன்னப்பன் நல்வரவை வாசற் படியருகில் வந்துநின் முசையுடன் நேசங்கொண்டானை நினைத்து வழிபார்த்து நின்றிருந்தாள்; அந்தி நிலைகாட்டிச் செங்கதிரும் சென்றதுவே மேலைத் திசையின் அடிப்புறத்தே! கையில் முழப்பூவும், கண்ணில் ஒளிப்பூவும், பையில் பழச்சீப்பும், பட்டுத் துணிக்கட்டும் கொண்டு குடித்தனத்தின் கோவேந்தன் போலவந்து வண்டுவிழி இன் பவல்லி வாயில் நகைமலரத் தான்மலரும் பொன்னப்பன் தன்கை வெறுங்கையாய்த் தோன்றித் தளர்ந்து தொலைவில் நடந்துவரும் காட்சிகண்டாள்! புத்தம் புதிதாய்க் கவலைப்பேய் ஆட்சிகொளும் தோற்றம் அவள் கண்டு நெஞ்சதிர்ந்தாள்! பேச்சில்லை; அங்கே பெருகும் சிரிப்பில்லை; மூச்சில்லை; வாயில் முறுவல் நகையில்லை. அந்தி யகல இருள்நுழையும்; அஃதேபோல் வந்து நுழைந்த மணவாளன் தன்பின்னே ஊமை யுடன்போகும் ஊமை எனத்தொடர்ந்து தீமை எதுவென் றறியாத் திருவனையாள் வீட்டினுட் சென்ருள்; விரைந்துதண் aர்மொண்டாள்; ஆட்கொண்டான் கையில் அதுகொடுத்தாள்; கால்முகத்தைத் து.ாய்த்ாக்கிக் கூடத்தே தொப்பென்று குந்தியவன் வாய்பார்த்துப் பேதை வணங்கிக் கலங்கிநின்ருள்!