உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளகன்றிட ஒளிபெருகிட இன்பத்தை ஏந்திவரும் நாள்! திங்கள் பிறந்தைந்து நாட்களும் தீர்ந்தனவே தங்க மனமுள்ளார். அத்தான் தகதகக்கும் தாமரைப்பூப் போல் மலர்ந்து சம்பளத்தை எண்ணிவந்து கோமகளே என்றென்னைக் கூவி அழைத்துக் கொடுப்பார்; இருகையும் கூடி நிறையத் தடுப்பாரில் லாமல் தனத்தை வரவேற்கும் வாடிக்கை யான நிகழ்ச்சி இதனோடு வேடிக்கைப் பேச்சும் விருந்தும் கலகலக்க வீடு மணக்கும்! விரையும் கடன்காரர் பாடுஞ் சிறப்படையும்.! பல்பொருளும் வந்தேறும்! வேலை புகுவாரின் வீட்டில்இந்தச் சம்பள நாள் கோலப் படுத்தும் குதுகலத்தை நாடாளும் மன்னர்களும் கண்டிருக்க மாட்டார்; குடித்தனத்தில் இன்னலெலாம் போயொழிய இன்பத்தை ஏந்திவரும் கன்னலன்ருே இந்நாள் கணவன் மனைவியென மன்னும் இருவர் மணவாழ்வில் புத்துணர்வு சேர்க்கும் திருநாள் சிரிப்பும் விளையாட்டும் ஆர்க்கும் புதுநாள்! அணிமணிகள் கொண்டுவரும் வீட்டு விழாநாள்: விழைகின்ற திட்டமெலாம்! திட்டிச் சுவைபார்க்கும் செல்வப் பெருநாளாம்!