உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நாச்சியப்பன் தோலான மனைவி கண்டு துவண்ட நெஞ்சம் இன்பவல்லி மேனி எழில்குறைந்து தோலாகித் துன்ப வடிவாகித் தோன்றும் நிலைகண்டு பொன்னப்பன் உள்ளம் பொருமினன்; போதுமினி என்னல் பொறுக்க இயலா தெனக்கருதிச் சம்மே ளனத்துள்ள தன்னுெத்த தோழருடன் அண்மிக் கலந்துரை யாடித் தலைவரிடம் எல்லோரும் சென்ருர்; இனிப்பொறுக்க ஆற்ருேம்யாம் வல்லாரே வேலை நிறுத்தம் நிறுத்திடுவீர்! இன்றே தொழிற்சாலை தன்னைத் திறப்பித்தால் நன்ருகும் என்றுரைத்தார்; நம்கோரிக் கைதன்னை விட்டுக் கொடுத்தல் அவமானம்; வெற்றிவரும் மட்டும் பொறுமையுடன் காத்திருக்க மாட்டீரோ? என்று தலைவர் இயம்பினர்; பொன்னப்பன் குன்று நிமிர்ந்ததுபோல் கூற்றம் அதிர்ந்ததுபோல் உள்ளங் குமுறி உரைக்கத் தொடங்குகின்றன். கள்ளன் திருட்டைக் கடிவதுபோல் மானத்தைப் பேசுந் தலைவரே, பேதைப்பெண் போலேவாய் கூசித் தொழிலாளர் கூட்டமெலாம் இன்றுவரை பேசா திருந்ததனுல் பேயாட்டம் ஆடிவிட்டீர் கூசாமல் கைநீட்டிக் கொள்ளைப் பணம்வாங்கிக் கொண்டதனால் அன்ருேஎம் கோரிக்கை தூங்கிற்று? பண்டங் கரைந்து, பணங்கரைந்து, வாழ்வதற்குக் கொண்ட மனையாள் குழந்தை களுங்கரைந்து தொண்டை கரைந்து துடிப்புங் கரைந்திங்கு வந்துநிற்கின் ருேம்நீரோ, மானம் அவமானம் இந்த விதமென் றெடுத்துரைக்க வந்துவிட்டீர்!