உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 93 தொழிலாளர் தலைவர்; கைக் கூலித் தரகர் கோரிக்கை யொன்று கொடுத்திரண்டு திங்கள் செல யாருக்கு நட்டமென அஞ்சா திருக்கின்றீர். பேசி முடித்ததென்ன? பெற்ற நலமென்ன? ஏசிக்கொண் டேயிருந்தால் இங்கு நிலையென்ன? திட்டம் பிசுபிசுக்கச் செய்வதற்குக் கைக்கூலி மட்டும் செலவழித்து மற்றச் செலவின்றி ஆதாயம் பார்க்கின்ற ஆசைமுத லாளிக்குத் தோதாகச் சூழல் உருவாக்கித் தந்துவிட்டீர்! அறிஞர்வழி முன்னேற்றச் சங்கம்! நம்பிக்கை யற்றுவிட்டோம் நாங்கள் தொழிலாளர் வெம்பிக் கிறுகிறுக்க வாழ்வில் விளையாடும் வெற்றுத் தலைமையிங்கு வேண்டாம்; உமைவிலக்கி முற்றுந் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை ஏற்படுத்து கின்ருேம்யாம் எங்கள் 56.57 ಹಹ ஆற்றல் மறவர் அணிகண்டோம் என்றுரைத்து மீண்டான்தன் தோழருடன்! மேலும் செயலாற்றி வேண்டாத் தலைமை விலக்கி அறிஞர்வழி சாரும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை ஊரில் உருவாக்கி உண்மைக்குப் பாடுபட்டு நேர்மை நிலைநிறுத்தி நேயத் தொழிலாளர் சீர்மை நலங்கூட்டி செய்யுந் தொழில்வளர்த்து வெற்றிகண்ட கையோடு வீடு திரும்பிவந்தான் வெற்றுக்கை யல்ல.இது வெற்றிக்கை மானே