உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் ؤق அறுபதின யிரம் பொன்னும் கஜினி மன்னன் அன்புடைய வேண்டுதலும் கவிஞன் நெஞ்சில் சுறுசுறுப்பை யுண்டாக்கிக் கவிதை ஊற்றைத் தோற்றுவித்த தென்றிடலாம்! காவி யத்தின் பெறுமதியை எண்ணியந்தக் கவிஞன் உள்ள பெருந்திறமை யத்தனையும் கூட்டி வைத்து விறுவிறுப்பாய் எழுதிவிட்டான்; கொண்டு வந்தான்; வேந்தனுமக் காவியத்தைப் படிக்க லானன்! இருந்தபல நற்குணத்திற் குவமை காட்டி இல்லாத சிலவற்றைப் புனைந்து கூட்டிப் பெருமையெல்லாம் அவன் பெயரே என்று நாட்டிப் பேசுமொரு காவியத்தைப் படிக்க லாளுன்! வரியெல்லாம் கஜினியவன் புகழ் மணக்கும் வகையெழுதி வைத்திருந்த கவிதை மாலை விரிகடலின் நடுநிலைத்த உலகம் போலே விளங்குமந்தக் காவியத்தில் தன்னைக் கண்டான்! சொல்லெல்லாம் இனித்திருக்கும்; சொல்லினுள்ளே தொக்கிநின்ற பொருளெல்லாம் புகழ் மணக்கும்; வெல்லம் போல் பாடல்களில் தன்னைக் காட்டி விளையாட்டு நடத்துகின்ற திறமை கண்டான்! நல்லொளியை வீசுகின்ற இரத் தினத்தால் நாடாளும் கஜினிபெயர் எழுதினற்போல் வல்லமையாய்க் காவியத்தில் எழுதி விட்டான் மண்ணுலகில் கஜினிபெயர் நிலைக்கு மாறே! காவியத்தைப் படித்த மன்னன் உள்ள மெல்லாம் களிகொள்ள எதிர்நின்ற கவியை நோக்கிப் பார்வியக்கக் கவிபாடிப் புகழைச் சேர்த்த பர்தோசிக் கவிமன்ன நன்றி! நன்றி!