உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. நாச்சியப்பன் மெல்லவந்து நீகேட்கும் பொருள்தான் என்ன? மேதினியில் அப்பொருளின் மதிப்பு மென்ன? சொல்லிவிட்டுக் கேளென்ருன் மன்னன் நெஞ்சில் தோன்றியதாம் கருத்தறிய நினைத்த செம்மல்! எண்ணரிய போர்செய்தேன் பொருள்கள் பெற்றேன் என்னை வந்து வணங்குகின்ற மன்னர் பல்லோர் வண்ணமுடி தாழ்ந்ததுவும் கண்டேன்; என்றன் வாள் நுனியின் உயர்வும் நான் கண்டு விட்டேன்! உண்ணவரும் பேரலைகள் கண்டும் அங்கே உறுதியுடன் உயர்ந்திருக்கும் கரையைப் போலே மண்ணுலகில் நிலைத்திருக்கும் புகழைக் காண மனங்கொண்டேன் உதவிடுவாய் கவிதை மன்ன! என்றென்றும் அழியாமல் இருக்கும் செய்யுள் எழுத்தினிலே என்புகழைப் பதித்து விட்டால் நன்றென்பேன்; நீ மறுத்தல் நன்றன் றென்பேன்; நலமிக்க புலமையினை யுடைய வுன்சொல் குன்றினிலே எனயேற்றி நிற்க வைத்தால் கொடுத்திடுவேன் அறுபதின யிரம்பொன் னென்ருன்! சென்றிடுக காவியத்தை எழுதி வந்து சேர்த்திடுக வேண்டுகின்றேன் என்று ரைத்தான். வாள்பாய்ந்த புண்வழியே வடியும் ரத்தம் வாதையுடன் துடிக்கின்ற உயிர்கள் கண்டும் நீள்கரத்தால் திரட்டிவந்த நிதியை யெல்லாம் நின்னெதிரே வைக்கின்ருன் மன்னர் மன்னன்! தோள்வலியால் சேர்த்துவந்த பொருட்கு வைதான் தொகுத்தெழுதும் காவியத்தின் விலைஎன் கின்ருன்! நாள் முழுதும் உழைத்தாலும் கிடைத்த லாமோ, நல்லதொகை ஒப்புக்கொள் என்னு முள்ளம்!