உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 97 பற்றுடையான் உயிர்காக்க எருமை மாட்டின் பருத்தவுடல் ஏறிவரும் தருமன் தன்னை எற்றியுதைத் திட்டசிவன் தன்சி லையை இருதுண்டாய் விழவடித்த கஜினி தன்னை நெற்றிக்கண் திறந்துறுத்துப் பார்த்த தாலே நீருளுன் என்னுமொரு கதையு மில்லை! சுற்றிக்கொண் டோடிவிட்டான் கஜினி நாட்டான் சுடர்வீசும் நவமணிகள் என்று சொல்வார்! பிறநாட்டார் நெஞ்செரியக் கொள்ளை யிட்டுப் பெருமையுடன் தன்னட்டை வளப்படுத்தும் திறனுடையான் கஜினி மன்னன்; கலை வளர்க்கும் தெம்புடையான்; கல்வியினைப் பரப்புகின்ற முறையறிந்தான்; பாவலரை ஆதரிக்கும் மொழிப்பற்று மிக்குடையான்; கவிதை யின்பம் நிறைந்திருக்கும் நெஞ்சுடையான்; நற்குணங்கள் நிறைகுடமாய்த் திகழ்ந்திருந்தான்என்றும் சொல்வார். அரசவையில் கூடுகின்ற புலவர் தம்மின் அருந்தலைவன் பர்தோசி-கவிதைச் சிங்கம்! முரசறைந்து போர்கூட்டும் கஜினி மன்னன் மொழித்திறத்தால் சபைகூட்டும் கவிதை வேந்தை வரவேற்றுச் சிரித்தபடி கூறு கின்ருன் வளமான சொல்லடுக்கிச் செய்யுள் கட்டித் தருகின்ற பெரும்புலவ கேட்கு மொன்றைத் தருவாயோ மலர் வாயே திருவாய் என்ருன் வில்லெடுத்துப் போரிட்டு வீரங் காட்டி விளங்குமொரு புகழ்சேர்த்த கஜினி மன்ன! சொல்லெடுத்துக் கவிபாடிப் புலமை நாட்டித் தொல்புவியில் நிலைத்தபுகழ் சேர்க்கு மென்பால் 7 -