உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாச்சியப்பன் சொல்லரிய கொடுமை யெல்லாம் செய்து கொள்ளைச் சொத்தனத்தும் தன்னுட்டிற் கொண்டு சேர்த்தான் கல்லடுக்கிக் கட்டிவைத்த கோயி லுள்ள கடவுளையும் விடவில்லை கஜினி மன்னன்! உயிர்பறிக்க வந்திருந்தான் எருமை மாட்டில் உட்காரும் யமதருமன்! மார்க்கண் டேயன் அயரவில்லை சிவன்சிலையை அணைத்துக் கொண்டான் அக்கணமே சிவன்வந்தார்; உதையும் விட்டார்! பயந்தோடி மறைந்துகொண்டான் தருமன்; என்றும் பதினருய் வரம்பெற்ருன் மார்க்கண் டேயன்! நயமுள்ள இக்கதையோ கடவுள் சக்தி நனிபெரிதாம் என்பதற்குச் சான்று கண்டீர்! நாட்டு மக்கள் துன்பமுறக் கொள்ளை யிட்டு நட்டகல்லைத் தட்டிவிட்டுக் கோயில் சூழ்ந்த கோட்டைதன்னே இடித்துமட்டம் ஆக்கி விட்டுக் கொள்ளையிட்டான் அங்கிருந்த பொருளை யெல்லாம்! வாட்டமுற்ற பக்தரெல்லாம் அழுதிருந்தார் வரவில்லை சிவபெருமான் கஜினி மன்னன் போட்டிருந்த திட்டமது வெற்றி காணப் புறப்பட்டான் பொன்ளுேடும் பொருளி ைேடும்! பொருள்வேண்டும் போதெல்லாம் இந்தி யாவில் புகுந்துகொள்ளை யடிப்பதுவே தொழிலாய்க் கொண்டு வருவாளும் கஜினியினை அடக்கு தற்கு வல்லமையாய் உள்ளவர்கள் இந்து நாட்டில் ஒருவரில்லை முப்பத்து முக்கோ டிப்பேர் உண்டான கடவுளரில் உதவி செய்ய ஒருவருமே வருவதில்லை என்றி ருந்தால் உள்ளபொருள் போவதற்குத் தடையு முண்டோ?