உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னும் வெள்ளியும் சிலைவணக்கம் செய்வாரின் தலையறுத்துச் சிந்துகின்ற குருதிவெள்ளம் கண்டு நெஞ்சில் அலைபாயும் பெருமகிழ்ச்சி காண்ப தென்றன் அருங் கொள்கை என்றிடுவான் கஜினி மன்னன் கலைவளர்க்கத் தன்னுட்டை வளப்படுத்தக் காசுபொருள் சேர்ப்பதற்குக் கருதி நல்ல நிலைபெற்றுத் திகழ்ந்திருந்த இந்துஸ்தானில் நினைப்புவைத்தான்; படையெடுத்தான்; கொள்ளை யிட்டான்! இந்துக்கள் தேசங்கள் ஐம்பத் தாறே என்ருலும் வேற்றுமையோ எண்ண லாகா! சொந்தமகள் தனை மணந்த கணவன் பேரைச் சொல்லியொரு புகழ்மாலை சூட்டி ೧L-fು நொந்திடுவான் ஒரரசன், அண்ணன் வெற்றி நோயாகும் தம்பிக்குத் தந்தை போனல் எந்தவிதம் பிரித்திடுவோம் நாட்டை என்றே எண்ணமிடும் இளவரசர் இந்துஸ் தானில்! நல்ல நல்ல ஊர்களுக்குத் தீயை வைத்தான் நடுங்கிவரும் மக்கள்பொருள் பறித்துக் கொண்டான் வல்லவராய்ப் படைதிரட்டி எதிர்த்த மன்னர் வருவதெல்லாம் தோற்பதற்கே என்று காட்டிச்