பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் - 101 கவிவாணன் நெஞ்சினிலே துன்ப மேற்றிக் காய்சினத்தால் அவனிருக்கும் வேளை பார்த்துக் குவிபொன்னை யனுப்பிவைத்து வியப்பி லாழ்த்திக் கொள்ளையின்பம் சேர்ப்பதற்கே எண்ணி யந்தப் புவிமன்னன் வண்டிகளில் அனுப்பி வைத்த பொன்னெல்லாம் ஒருவாசல் வழியே செல்லக் கவிவீட்டின் மறுவாசல் வழியே வந்த சவப்பெட்டி கண்டார்கள் நாட்டி லுள்ளோர்! புத்தமுதச் சொல்கூட்டிப் புகழை நாட்டும் புலவனவன் முடிவுதனைக் கேட்ட போது, சொத்தெல்லாம் பறிபோகப் பார்த்தி ருந்தும், தூய்தான கடவுள்சிலை உடைந்த போதும், குத்துயிராய் மக்கள்வதை யுற்ற போதும், கொடியனையார் கற்பழிக்கப் பட்ட போதும், இத்தேச மக்கள்கொண்ட துயர மெல்லாம் எழுந்தொன்ருய்ச் சேர்ந்ததுவே கஜினி நெஞ்சை!