உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்யாக் காதல் எழில்புரி அரசவிதியில் இளைஞன் புத்தன் உருவம், பொருந்துகலை ஞானங்கள் இத்தனையும் கொண்ட இளைஞன், எழில்புரியின் கீழரச வீதிவழிச் சென்ருன்; கிளேத்தோங்கும் வாழ்த்துகின்ற பக்தி வழிந்தொழுகும் கூட்டத்தார் தூக்கிவரும் பல்லக்கில் செய்ய சுடரொளியோ! நல்வயிரப் பேரொளியோ! நல்லோன் திருமுகம் வில்லன்ன கண்ணிரண்டும் வீசும் ஒளி!என்ன எண்ணும் படியழகு வாய்ந்தான் இருந்தபக்தர் பண்ணுெழுகப் பாடத் தலையசைக்கும் பாங்கொன்றே பொன்னுயிரங் கொடுக்கப் போதுமெனில். வந்திருந்த அன்னேன் மொழிகேட் டசையாத் தலைகளுண்டோ? கொண்ட கருத்தைக் குறிப்புகளைக் கொள்கவெனக் கண்டமக் கட்கெல்லாம் காசினியிற் சொல்லிவைத்தான்! வந்தார் அவனை விட்டுப் போகச்சிறிதேனும் சிந்தையின்றிச் சூழ்ந்திருக்கச் சீனிகண்ட சிற்றெறும்பின் கூட்டம் குழுமுதல்போல் மக்கள் தொடர்கின்ருர். ஆட்டம்கொடுத்திருக்கும் பல்லக்கின் உள்ளே,தான் வீற்றிருந்த வாறே விளக்கிச் சமயநெறி சாற்றும் அழகினிலே மக்களெலாம் சார்ந்துவிட்டார் என்னென்போம் சொன்னயத்தை என்று.