உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 இளைஞன் அழகில் விலைமகள் ஈடுபாடு கண்ட மக்கள் தொடர்ந்துவரக் காணு மக்கள் ஓடிவரக் கொண்ட கொள்கை யுரைத்திட்டான் குறிப்பால் புத்தகம் உயர்வென்ருன் பண்டம் அற்ற பாழுடம்பில் பாவம் ஆசை கொளலென்ருன் கண்டபோதில் அவனழகில் காதல் தோன்றும் உண்மையிலே! பல்லக் கேறி எழில்புரியின் பார்வைக் கழகாம் கீழரச நல்ல வீதி வழிவந்தான் நங்கையர் வாயிற் படிநின்ருர் மெல்விய லாரிற் சிலபேர்கள் மேலுற நாணம் பொங்கியதால் பல்கணிப் பின்னின் றவனழகைப் பார்த்துப் பருகிக் கொண்டிருந்தார். அந்த வீதிக் கடைசியிலே அங்கோர் மாட மீதினிலே சிந்தை மானம் விட்டவளாம் சிரித்துக் குலுங்கும் விலைமகளாம் அந்த நகரத் திளைஞர்களை ஆசை காட்டிப் பொருள்பறித்தாள் சுந்தரி என்னும் பெயருடையாள் தோழிய ரோடும் நின்றிருந்தாள்.