பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 105 அன்னம் அன்ன நடையுடையாய்! யான்நின் ஆணை ஏற்கின்றேன் சொன்னேன் அன்னுேன் நின்னழகில் சொக்கான் என்ருள் அத்தோழி. அழகிற் சொக்க மாட்டான? அன்பிற் சொக்க வைக்கின்றேன் மழலே போலப் பேசியவன் மனத்தைக் கவர முயல்கின்றேன் பொழுது கழிய நிற்காதே. போவாய்! விரைந்தவன் தங்குமர நிழலைப் பார்த்து வருவாய். என் நினைப்பைக் கெடுக்கத் துணியாதே! என்றனள் சென்ருள் அத்தோழி. ஏனைய தோழியர் எல்லோரும் கன்னியைக் கண்டு காமுற்ற காளையர் தம்மைக் கண்டுள்ளோம் கன்னி கண்டு காமுறவே காளை ஒருவன் உள்ளதனே இன்று கண்டோம் விந்தையிதே என்று பேசிச் சென்ருர்கள். தோழி வரவை எதிர்நோக்கித் துடிக்கும் உள்ளம் உடையாளாய் வாழி இளைஞன் அழகென்று வாழ்த்தி வாழ்த்திப் பித்தேறி பாழென் றுலகை மதித்தாயோ பழக ஒரு பெண் இல்லாமல்? நாளை நாமே மனம்புரிவோம் நல்வாழ் வறிவாய் என்ருளே!