உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நாச்சியப்பன் 'சொல்லடி இன்பச் செய்தி சோர்வின்றிக் கேட்பல்” என்ருன். “வெல்லமாம் மங்கை சொற்கள் விரைவினிற் சொல்க” வென்ருன். வெல்லமன் றுமக்குச் சொல்வேன் விளைத்திடும் கசப்'பென் ருட்குச் சொல்லடி வேப்பங் காயும் துணைசெயும் உயிருக் கென்ருன். 'எழில்புரியில் புத்த மென்னும் எதிர்ச்சமயம் தன்னை மக்கள் தழுவிவரல் காணிரோ? நீர் சிவபக்தர் தாமோ? சைவம் தழைக்கும்வழி ஈதோ? சற்றுச் சாற்று”மெனக் கேட்டா ளுக்குப் 'பிழைக்கும்வழி சமயஞ் செய்யும்! பேச்சுவிடு பொழிவாய் இன்பம்!” என்ருனை மீண்டுங் கேட்டாள் "எப்படிநீர் பிழைப்பீரோ? முன் நின்றேஅச் சமயங் காக்க முனையாதி ருப்பீர் ஆயின் சென்றேம றையும் பின்னர்ச் சிலநாளும் வாழல் ஏலா(து) என்றே நீர் அறியீ ரோ? சற் றெனக்குச்சொல் வீரே' என்ருள்! "ஊர்சுற்றிப் பரப்பு கின்ருன் உடல்தளர்ந்து விட்டே னிங்கே யார் வந்து சமயம் காக்கும் ஆர்வத்தைக் காட்டு கின்ருர்?