உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நாச்சியப்பன் கண்போல மங்கையரைக் கருதும் நாட்டில் காமத்தின் வட்டிலென்றே சொல்லிப் பின்னர் பெண்களினல் உலகமெலாம் கெட்ட தென்று பேசினனம் சற்றேனும் புத்தி யின்றி! மண்ணுளும் அரசனையே கடவு ளென்று மதிக்கவென்று கூறுமனு நீதி தன்னை மண்ணென்று கருதினளு? நின்ன ழைப்பை மதியாதான் தனைப்பொறுத்தாய் என்ன விந்தை! இந்நாட்டில் இராதபடி ஒட்ட வேண்டும் இல்லை.எனில் மன்னனுக்கும் நாட்டி னுக்கும் எந்நாளுந் தழைத்திருந்த சைவத் திற்கும் இருக்குமனு நீதிக்கும் மாத ருக்கும் எந்நாளும் தீதன்றி நன்மை யில்லை இப்பொழுதே ஒட்டிடுவாய். இல்லை! இல்லை! பின்நாளில் துயர்செய்ய எண்ணக் கூடும் பெருங்கழுவில் ஏற்றத்தான் வேண்டும்! வேண்டும்! சைவத்திற் கெதிரான சாபக் கேட்டைச் சரித்தழிக்க வேண்டுமிருங் கழும ரத்தில் மைவைத்த கண்ணினரை மன்னன் தன்னை மதியாத சமயத்தைக் கழுவி லேற்றச் செய்வித்த பேரரசன் பேரைச் சொல்லிச் சிற்றுார்கள் தோறுமக்கள் விழாக்கொண் டாடி உய்வித்தான் சைவத்தை உரிமை தன்னை உண்மைதனை என்றுரைத்துப் பாட வேண்டும்." பூசாரி இவ்வாறு நீட்டிக் கொண்டு போகின்ற போதிலந்த உயிர்க் கொலைக்குக் கூசாத மன்னனவன் 'நன்று! நன்று கூறினீர்நீர் யானறிந்தேன்” என்று வாளை