உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 123 வீசாது பக்கத்தே வீற்றி ருந்த வெம்படையின் தலைவனுக்கங் காணே யிட்டான்.

மாசாபக் கேட்டினை, அப் புத்தர் தம்மை

மடியும்வகை கழுவேற்றப் பிடித்து வாரீர்!" உடனெழுந்தார் படைத்தலைவர் குருக்க ளாரும் உளமகிழ்ந்தார் தன்பகையை ஒழித்தோ மென்றே! அடமன்னன் மனமகிழ்ந்தான் மதியா தானே அழிப்பதுடன் பலநாட்கள் பொழுதுபோக்க நடைபெறுமோர் விளையாட்டை நகைச் சுவையை நாட்டிவிட்டே னென்றேதான் ஆனல் அந்தப் படைத்தலைவர்க் கொருவருத்தம் என்ன வென்முல், படைத்திறனைக் காட்டும்போர் கழுவில் இல்லை! இளைஞன் துறவு களைதல் வடநாட்டில் குருநாதர் தம்மைக் காண வத்திருக்கும் இளைஞனவன் கிருஷ்ணு என்னும் படைகளைப் போல் அலையடித்துப் போகும் ஆற்றின் பக்கலொரு காட்டுவழிப் போகுங் காலை நடைக்களைப்பால் சோர்ந்தங்கோர் மரத்தின் நீழல் நண்ணித்தன் மலர்க்கண்கள் மூடிவிட்டான். கடைக் கண்கள் திறக்குங்கால் தன்னைச்சுற்றிக் கருணைமிகும் புத்தர்களைக் கண்டு வந்தான். என்ன விந்தை! குருநாதர் தானு மங்கே இருக்கின்ருர் இளைஞனவன் அவர்முன் கைச் சென்றுதலை தாழ்த்தியொரு வணக்க மிட்டுச் செப்புகின்ருன். 'குருநாதா சித்தங் கெட்டேன்!