உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நாச்சியப்பன் கன்னியொருத் தியின்பால் நான் காதல் கொண்டேன் ! கருத்தழிந்தேன் புறப்பட்டேன் தம்மைக் காண என்ன செய்ய” என்றுரைத்தான். வாய்ம லர்ந்தார்! என்ன இது! வெல்லமழை பொழிகின் ருரே! 'கேளப்பா சீடனே ! நீ புத்தந் தன்னைக் கெடுபிடிகள் மிகுஞ்சமயம் என்றே எண்ணி மீளத்தான் வேண்டுமென ஓடா தே! சீர் மிகவுடைய புத்தமிது மக்கள் உள்ளம் ஆளத்தான் வேண்டுமெனக் கண்டோ மாதல் அதற்குரிய புதுக்கொள்கை வகுத்து விட்டோம் ஆளத்தான் செய்யுமன்னர் துணையை வேண்டி அவர்க்குந்தான் சில இடங்கள் உண்டென் ருேமே. இல்லறத்தான் தானுமிங்குப் புத்தன் என்ன இருத்தலுமாம் உயிர்வதையை நீக்கி விட்டு செல்லரித்த குப்பைகளை வேத மென்று செப்பிவரும் ஆரியத்தின் யாகச் சூழ்ச்சி மல்லுவந்த மன்னர்தமை மடக்கி வைத்து மடியும்வகை உயிர்வதைகள் செய்யும் சூழ்ச்சி எல்லாமும் நீக்கிடவே இச்சை கொண்டோம் இதற்குத்தான் வேந்தர் துணை நாடு கின்ருேம்! வேந்தர்களால் புத்தமதம் ஆன தப்பா! வேந்தர்களைப் புத்தமதம் ஆண்ட தப்பா ! சாந்துணையும் மரத்தடியே இடமென் ருய்ந்து சகம்வாழ வழிவகுத்த புத்தர் பெம்மான் வேந்தரன்ருே? அசோகர் முதல் கனிஷ்க ரெல்லாம் விளையாடிக் கத்தியிலே புரண்டெ முந்த வேந்தரன்ருே? இந்நாளும் புத்தந் தன்னை வேந்தர்கையில் விட்டுவிட்டால் விளையு மன்ருே?