உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நாச்சியப்பன் அந்த இளைஞன் அகன்ருளும் அன்று கழுவில் ஏறவில்லை இந்தச் செய்தி யுண்மையதோ? எனக்குச் சொல்வாய்' என்ருள்பின், 'வஞ்சி துணையால் மீண்டானே? வருமோர் துயரை யறிதற்கே நெஞ்சில் சுடர்தான் கொண்டானே? நிகழ்த்தாய்” என்ருட் குரைக்கின்ருள் 'வஞ்சியின் தோழி ஒருத்தியொடு வார்த்தைக ளாடி நேற்றிருந்தேன் வஞ்சி வருத்தப் பட்டாளாம் வஞ்சக் கழுவின் செய்தியினல். "காதல் கொண்டே வஞ்சியின்பால் கயவன் அகன்று போயிருப்பான் சாதல் தவிர்த்துக் கொண்டானே தக்க வழியைக் காண்கின்றேன் காதல் உற்றே வஞ்சியுந்தான் காளை இறந்தான் என்றவளுக் கோதத் துன்பம் மிக்கவளாய் உரைத்து நின்ருள் ஆகையில்ை வஞ்சி தன்னைக் கொன்றுவிட்டால் வஞ்சகன் ஏமாற் றங்கொள்வான் நெஞ்சிற் கொண்ட துக்கத்தால் நேரே சாவைக் காண்டானல் வஞ்சந் தீர்க்க வழிசொல்வாய் வாழி! தோழி!” என்ருட்கு நெஞ்சில் அச்சம் மிக்காள்அந் நேரிழை யாளும் சொல்கின்ருள்.