உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 தாச்சியப்பன் துணிகின்ற செயலாற்றும் பருவத் தைப்பெண் தொண்டுக்குப் பயன்படுத்தும் இளைஞ ரெல்லாம் பிணியென்பேன்; குறிக்கோளை மேற்கொள் ளாத பித்தர்களின் கூட்டமென்றே பழித்து ரைப்பேன்! "நாட்டுக்குப் பணிசெய்யத் தக்க ஆண்டை நங்கையரைக் காதலிக்கச் செலவ ழிக்கும் கோட்டமுறு கொள்கையிலே செல்ல மாட்டேன் கோதையரை நெஞ்சினிலே ஏற்க மாட்டேன் வாட்டமுறும் பலபேரைப் பார்த்தி ருந்தும் வழுச்சேற்றில் நடப்பவன்போல் இல்ல றத்தை வேட்டடைய முனைவேனே நண்பா என்றன் விளக்கத்தைக் கூறிவிட்டேன் அறிவாய் நன்றே!” முத்தப்பன் இவ்வாறு சொல்லக் கேட்டு முறுவலுடன் பொன்னப்பன் கூறு கின்ருன் 'இத்தரையில் பெண்களிடம் கொள்ளும் காதல் இழிவென்று கூறிடுவார் கூற்றை நோக்கின் தத்துவத்தை உணராதான் இறைவ ணக்கம் தவறென்று பேசுவதாம்! கடலின் காற்றைச் சொத்தென்னும் மருத்துவரின் உரைம றுத்துச் சுகமிழக்கும் பேதைமையாம் பிள்ளைப் பேச்சாம்! 'காந்தக்கண் பார்வையிலே வீழு மட்டும் காளேயர்கள் பேசுகின்ற பேச்சைத் தான் நீ வேந்தனைப் போல் வீறுடனே பேசு கின் ருய்; வேளைவரும் முத்தப்பா, பொறுத்தி ருப்பேன். கூந்தலிலே பூச்சூட்டும் குலத்தை என்றும் குறைவாகப் பேசுவதால் பயனே இல்லை; சாந்தமுடன் காத்திருப்பாய்; ஒருநாள் நீயும் சம்பந்த புரம் நோக்கிப் போவா யப்பா !